காசா யுத்தம் பைடென் தோல்விக்கு காரணம் ஆகலாம்?

காசா யுத்தம் பைடென் தோல்விக்கு காரணம் ஆகலாம்?

இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையில் இடம்பெறும் காசா யுத்தம் அடுத்த ஆண்டு அமெரிக்காவில் இடம்பெறவுள்ள சனாதிபதி தேர்தலில் பைடெனுக்கு பாதகமாக அமையலாம் என்று கருதப்படுகிறது.

2020ம் ஆண்டு இடம்பெற்ற சனாதிபதி தேர்தலில் பைடேன் Michigan மாநிலத்தில்  2,804,040 (50.62%) வாக்குகள் பெற்று அந்த மாநிலத்தின் 16 electoral வாக்குகளையும் பெற்று இருந்தார். ரம்ப் 2,649,852 (47.84%) வாக்குகள் பெற்று அந்த மாநிலத்தில் 0 electoral வாக்குகளை பெற்று இருந்தார். 2016ம் ஆண்டு ரம்ப் இங்கு 10,000 மேலதிக வாக்குகளை மட்டும் பெற்று 16 electoral வாக்குகளை பெற்று இருந்தார்.

அமெரிக்காவில் மாநிலங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு அந்த மாநிலங்களுக்குரிய electoral வாக்குகள் கணிக்கப்படும். பின் electoral வாக்குகளை எண்ணி யார் சனாதிபதி என்பதை தீர்மானிப்பர்.

Michigan ஒரு swing மாநிலம். அமெரிக்காவில் ஒரு தொகுதி மாநிலங்கள் எப்போதும் Republican கட்சிக்கு வாக்களிக்கும், மறு தொகுதி எப்போதும் Democratic கட்சிக்கு வாக்களிக்கும். அதனால் இரண்டு கட்சிக்கும் மாறி, மாறி வாக்களிக்கும் swing மாநிலங்களில் வெற்றி கொள்வது சனாதிபதி ஆவதற்கு அவசியமாகும்.

அமெரிக்காவில் Michigan மாநிலத்திலேயே அதிகம் இஸ்லாமியர் வாழ்கின்றனர். இவர்கள் தொகை சுமார் 310,000 என்று கூறப்படுகிறது. காசா யுத்தத்தில் பைடென் இஸ்ரேலுக்கு கண்மூடித்தனமான ஆதரவை வழங்குவதால் இவர்கள் பைடென் மீது விசனம் கொண்டுள்ளனர். பைடெனின் கட்சி உறுப்பினரும் பைடெனுக்கு எதிராக கிளர்ச்சி செய்கின்றனர்.

2020ம் ஆண்டு தேர்தலில் இந்த மாநிலத்து Dearbon என்ற நகரில் பைடென் சுமார் 75% வாக்குகளை பெற்று இருந்தார். 2024ம் ஆண்டில் அத்தொகை வாக்குகள் பைடெனுக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே. Dearborn நகரில் சுமார் 50% மக்கள் அரபு வழி வந்தவர்கள்.

Michigan state 2020 election: Red: Trump Blue: Biden

இந்த மாநிலத்து Hamtramck என்ற நகரில் 2013ம் ஆண்டு இஸ்லாமியர் பெரும்பான்மை ஆகினர். 2015ம் ஆண்டு தேர்தலில் இந்த நகரசபை பெரும்பான்மை இஸ்லாமிய அங்கத்தவரை கொண்டிருந்தது. 2021ம் ஆண்டு நகரசபை தேர்தலில் அனைத்து உறுப்பினரும் இஸ்லாமியர் ஆகினர். அத்துடன் இங்கு நகர தலைவரும் (mayor) இஸ்லாமியர் ஆனார்.