காசா முரண்பாட்டால் Suella Braverman பதவி இழந்தார்

காசா முரண்பாட்டால் Suella Braverman பதவி இழந்தார்

பிரித்தானிய உள்துறை செயலாளர் (Home Secretary) Suella Braverman இன்று திங்கள் காலை பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் லண்டன் போலீசார் பலஸ்தீனரின் ஆர்பாட்டங்களுக்கு ஆதரவாக உள்ளனர் என்று கூறியமையே இவரின் பதவி பறிப்புக்கு காரணம்.

இவர் முன்னரும் சில கட்சிக்கு முரணான கருத்துக்களை வெளியிட்டு இருந்தவர்.

James Cleverly தற்போது Braverman  பதவியை பெற்றுள்ளார்.

அத்துடன் முன்னாள் பிரதமர் David Cameron மீண்டும் ஆட்சிக்கு இழுக்கப்பட்டு உள்ளார். Cameron பிரித்தானியாவின் வெளியுறவு செயலாளர் ஆக பதவி ஏற்கிறார்.

ஆபிரிக்கா மூல பிரித்தானிய சென்ற இந்திய பெற்றாருக்கு பிறந்த Braverman னின் தாய் ஒரு இந்து தமிழ் பெண். தந்தை கோவா (Goa) கிறீஸ்தவர்.