காசா மீதான தாக்குதலை BRICS கண்டிக்கிறது

காசா மீதான தாக்குதலை BRICS கண்டிக்கிறது

Brazil, Russia, India, China, South Africa ஆகிய நாடுகளை உள்ளடக்கிய BRICS நாடுகள் காசா மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நேற்று செவ்வாய் கண்டித்து உள்ளன.

இதுவரை பொருளாதாரத்தில் மட்டும் கருத்தாக இருந்த BRICS முதல் தடவையாக ஒரு யுத்தம் தொடர்பாக ஆராய அமர்ந்துள்ளது. தற்போது உலகின் 40% மக்கள் BRICS நாடுகளில் உள்ளனர். 2024ம் ஆண்டில் மீண்டும் அதிகரிக்கும்.

பலஸ்தீனரை அவர்களின் சொந்த மண்ணில் இருந்து இஸ்ரேல் கட்டாயப்படுத்தி நகர்த்துவது war crime என்றும் சில BRICS தலைவர்கள் கூறியுள்ளனர்.

BRICS இல் 2024ம் ஆண்டு முதல் புதிதாக இணைய உள்ள எகிப்து, எத்தியோப்பியா, அர்ஜென்டீனா, சவுதி அரேபியா, UAE, ஈரான் ஆகிய நாடுகளும் ஐ.நாவின் செயலாளரும் இணையம் மூலமான இந்த அமர்வில் பங்கெடுத்தனர்.

இஸ்ரேலை வன்மையாக கண்டித்த தென் ஆபிரிக்க சனாதிபதி இஸ்ரேலின் காசா மக்கள் மீதான collective தண்டிப்பு “war crime”, “genocide” என்றெல்லாம் கூறியுள்ளார். 

கடந்த கிழமை தென் ஆபிரிக்கா, பங்களாதேசம், பொலிவியா, Comoros, Djibouti ஆகிய நாடுகள் காசாவில் war crime நிகழ்ந்ததா என்பதை விசாரிக்க International Criminal Court ஐ கேட்டுள்ளன.

முற்காலங்களில் மேற்கேயும் காலை வையோம், கிழக்கேயும் காலை வையோம் என்று அணிசேரா நிலையில் இருந்து தற்போது அந்த இரு பக்கங்களிலும் காலை வைத்துள்ள இந்தியா மட்டும் இஸ்ரேலை தாக்காது பேச்சுவார்த்தைக்கான அவசியத்தை மட்டும் தெரிவித்துள்ளது.