காசாவில் இடம்பெறும் மானிட பேரழிவை (humanitarian catastrophe) நிறுத்தும்படி ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு (Security Council) எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐ.நா. செயலாளர் Antonio Guterres.
மிக நீண்ட காலம் பயன்படுத்தாத ஐ.நாவின் Article 99 மூலமே செயலாளர் இந்த எச்சரிக்கையை பாதுகாப்பு சபைக்கு விடுத்துள்ளார்.
மிக குறைந்த அளவிலேயே உணவுகளையும், எரிபொருளை இஸ்ரேல் கசாவுள் அனுமதிக்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார் ஐ.நா. செயலாளர்.
விரைவில் காசாவில் நோய்கள் பரவலாம் என்றும் அந்த நோய்கள் மேலும் பலரை பலியாக்கும் என்றும் ஐ.நா. செயலாளர் எச்சரித்து உள்ளார்.
அதேவேளை ஹமாஸ் இல்லாத West Bank பகுதிகளிலும் யூத காடையர்கள் பலஸ்தீனர் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் கட்டி வழங்கிய பாடசாலை ஒன்றையும் யூத காடையர் இடித்து அழித்து, அப்குதியில் இருந்த சுமார் 200 மக்களை விரட்டி உள்ளனர்.
M16 வகை ஆயுதங்களுடன் வரும் இந்த காடையர்கள் பலஸ்தீனரின் கால்நடைகள், ஒலிவ் அறுவடைகள் ஆகியவற்றையும் பறித்து சென்றுள்ளனர். யூத காடையர் பலஸ்தீனர் வாகனங்களை தீயிட்டும் உள்ளனர்.
இந்த காடையர் மீது தற்போது அமெரிக்கா விசா தடை விதித்துள்ளது. ஆனாலும் பெயர்களை பட்டியல் செய்யாத இந்த தடை ஒரு கண்துடைப்பாக அமையலாம்.
ஐரோப்பிய ஒன்றியமும் இந்த காடையர்களை தடை செய்ய வேண்டும் என்று ஜெர்மனி கூறியுள்ளது.