காசா சிறுவர்களின் மயானம் என்கிறது ஐ.நா.

காசா சிறுவர்களின் மயானம் என்கிறது ஐ.நா.

கடந்த ஒரு மாதமாக காசாவில் இஸ்ரேல் செய்யும் யுத்தம் காசாவை சிறுவர்களின் மயானம் (becoming a graveyard for children) ஆக்கியுள்ளது என்று ஐ. நாவின் செயலாளர் நாயகம் திங்கள் கூறியுள்ளார்.

காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்துக்கும் ஐ. நா. வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐ. நா. செயலாளர் நாயகத்தின் இந்த கூற்றால் விசனம் கொண்டுள்ளது இஸ்ரேல். இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர் Eli Cohen ஐ. நா. செயலாளரை “same on you” என்று சாடியுள்ளார்.

ஒரு மாதத்துக்கு முன் ஹமாஸ் இஸ்ரேல் ஆக்கிரமித்து உள்ள இடங்களில் 1,400சுமார்  யூதர்களை கொலை செய்து, 200 மேலானவர்கள் கைது செய்த பின் இஸ்ரேல் செய்யும் பழிவாங்கல் தாக்குதல்களுக்கு 10,000 க்கும் மேலான பலஸ்தீனர் பலியாகி உள்ளனர். அதில் 4,104 பேர் சிறுவர்கள் என்று கூறப்படுகிறது.

ஹமாஸின் தாக்குதலுக்கு 31 யூத சிறுவர்கள் பலியாகி இருந்தனர்.