காசா எறிகணையில் “Finish them” எழுதிய Nikki Haley

காசா எறிகணையில் “Finish them” எழுதிய Nikki Haley

கடந்த திங்கள் கிழமை காசா எல்லையோரம் உள்ள இஸ்ரேல் படையினர் முகாமுக்கு சென்ற ஐ. நாவுக்கான ரம்ப் ஆட்சிக்கால அமெரிக்க தூதுவர் நிக்கி ஹேலி காசாவுக்கு ஏவப்பட இருந்த எறிகணை (artillery) ஒன்றில் “Finish them” என்று எழுதினார்.

அதற்கு சில தினங்களுக்கு முன்னரே இடம் பெயர்ந்த பலஸ்தீனர் தங்கியிருந்த Fafah முகாம் மீது செய்யப்பட்ட இஸ்ரேலின் குண்டு தாக்குதலுக்கு 45 பொதுமக்கள் பலியாகி இருந்தனர்.

மேற்படி தாக்குதலை இஸ்ரேல் பிரதமர் Netanyahu பின்னர் “a tragic error” என்று கூறியிருந்தார்.

ரம்புக்கு எதிராக சனாதிபதி தேர்தலில் போட்டியிட Republican உட்கட்சி தேர்தலில் போட்டியிட்ட நிக்கி தோல்வி அடைந்து பின்வாங்கி இருந்தார். 

முன்னர் ரம்ப் மீது வசை பாடியிருந்த நிக்கி தற்போது ரம்புடன் மீண்டும் ஒட்டி உறவாட முனைகிறார். இதன் நோக்கம் ரம்ப் மீண்டும் பதவிக்கு வந்தால் மீண்டும் ஒரு உயர் பதவியை பெறுவதே.

இதற்கு முன்னரும் நிக்கி Fox செய்தி சேவையில் இஸ்ரேல் பிரதமரின் தாக்குதல்களை பாராட்டி, “finish them” என்று கூறியிருந்தார்.