Malmo என்ற சுவீடன் நகரில் இடம்பெறும் இந்த ஆண்டுக்கான Eurovision பாட்டு போட்டியில் இஸ்ரேல் பாடகர் பங்கு கொள்வதை எதிர்த்து பல்லாயிரம் பேர்களை கொண்ட காசா ஆதரவு ஊர்வலம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அந்த ஊர்வலத்தில் சூழலுக்காக போராடும் Greta Thunberg உம் கலந்து கொண்டுள்ளார்.
யூக்கிறேனுள் நுழைந்ததால் ரஷ்யாவை Eurovision போட்டியில் இருந்து விலக்கிய Eurovision அமைப்பாளர் இஸ்ரேலின் காசா கொடுமைகளையும் மீறி இஸ்ரேலை Eurovision போட்டியில் பங்குகொள்ள வைப்பதை சாடியுள்ளார் Greta.
Greta இந்த ஊர்வலத்தில் பங்கு கொள்வதற்கு “moral obligation to act” காரணம் என்று கூறியுள்ளார்.
இந்த ஊர்வலத்துக்கு எதிராக சுமார் 150 பேரை கொண்ட சிறியதொரு இஸ்ரேல் ஆதரவு ஊர்வலமும் அங்கு இடம்பெற்றுள்ளது.