காசா அழிவுக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுத பட்டியல்

காசா அழிவுக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுத பட்டியல்

இஸ்ரேல் காசாவில் செய்யும் பாரிய அழிவுகளுக்கு மூல காரணம் அமெரிக்கா வழங்கும் 2,000 இறாத்தல் எடை கொண்ட குருட்டு குண்டுகளே. இஸ்ரேலுக்கு அமெரிக்கா 14,000 இவ்வகை குருட்டு குண்டுகளை (dump bomb) கடந்த 7 மாதங்களில்  வழங்கி உள்ளது என்கிறது Associated Press செய்தி நிறுவனம்.

காசா யுத்தத்துக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுத பட்டியல்:
1) 14,000 MK-84 வகை 2,000-இறாத்தல் குருட்டு குண்டுகள் 
2) 3,000 Hellfire வகை வானத்தில் இருந்து நிலத்துக்கான ஏவுகணைகள் 
3) 6,500 500-இறாத்தல் எடை கொண்ட குண்டுகள் 
4) 1,000 bunker-buster குண்டுகள் 
5) 2,600 வானத்தில் இருந்து நிலத்துக்கான சாதாரண குண்டுகள் 

வியட்னாம் யுத்தத்தில் அமெரிக்காவால் பெரிதும் பயன்படுத்தப்பட்ட மேற்படி குருட்டு குண்டு வீசப்பட்ட இடத்தில் 50 அடி அகலமானதும், 35 அடி ஆழதுமான குழிகளை உருவாக்கும். இது 15 அங்குல இரும்பையும், 11 அடி சீமெந்து சுவர்களையும் துளைக்க வல்லது.

இந்த குண்டே காசாவில் பாரிய அழிவுகளை செய்துள்ளது. எதிரிகளை குறிவைத்து தாக்குவதற்கு பதிலாக காடுகளை அழிக்கவும் கட்டிடங்களை தகர்க்கவுமே இந்த குண்டு பயன்படும்.