இன்று ஞாயிறு இஸ்ரேல் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய உரையில் 2013 முதல் 2016 வரையான காலத்தில் நெட்டன்யாஹு ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த ஜெனரல் Moshe Yaalon காசாவின் வட பகுதியில் இஸ்ரேல் படைகள் war crime செய்கின்றன என்று கூறியுள்ளார்.
இஸ்ரேல் காசாவின் வட பகுதியில் இருந்து பலஸ்தீனரை விரட்டி அங்கு யூதர்களை குடியமர்த்த முனைவதாக முன்னாள் ஜெனரல் Moshe இஸ்ரேலின் கடும்போக்கு அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார். அவர் தனது கூற்றில் “at the end of the day, war crimes are being committed” என்று சாடியுள்ளார்.
காசாவில் இஸ்ரேல் படைகள் செய்வதை இஸ்ரேல் அரசு இஸ்ரேல் மக்களுக்கு மறைத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அக்டோபர் மாதம் வடக்கு காசாவில் உள்ள 400,000 பலஸ்தீனர்களையும் இஸ்ரேல் தெற்கு காசாவுக்கு நகர கூறியுள்ளது. அத்துடன் வடக்கு காசாவுக்கு உணவு, நீர், மருந்து வழங்கும் நடவடிக்கைகளையும் இஸ்ரேல் இராணுவம் தடுத்து வருகிறது.
ICC என்ற சர்வதேச குற்ற நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹுவை கைது செய்ய ஏற்கனவே கட்டளை விதித்துள்ளது. Human Rights Watch காசாவில் இஸ்ரேல் இராணுவம் செய்வதை “crimes against humanity” என்றும் “ethnic cleansing” என்றும் விபரித்துள்ளது.