காசாவில் ஞாயிறு முதல் யுத்த நிறுத்தம் ஆரம்பமாகி உள்ளது. யுத்த நிறுத்த உடன்படிக்கையின்படி முதல் நாள் 3 இஸ்ரேலிய கைதிகள் ஹமாஸால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பதிலுக்கு இஸ்ரேல் 90 பலஸ்தீன கைதிகளை விடுதலை செய்துள்ளது. கைதிகள் விடுதலை தொடரும்.
இந்த கைதிகள் பரிமாற்றம் ஹமாஸ் முற்றாக அழிந்துவிடவில்லை என்று காட்டுகிறது. இஸ்ரேல் காசா மக்களையும், அவர்களின் வீடுகளையும் அழித்த அளவுக்கு ஹமாஸை அழிக்கவில்லை.
ஹமாஸால் விடுதலை செய்யப்பட்ட 3 இஸ்ரேலியர்களையும் செஞ்சிலுவை சங்கம் இஸ்ரேல் படையிடம் கையளித்துள்ளது.
இஸ்ரேல் படைகள் காசாவில் 92% வீடுகளை தகர்த்து உள்ளதாக ஐ.நா. கூறுகிறது. இதனுடன் ஒப்பிடுகையில் இலங்கை இராணுவம் பலபடி மேல். மேற்கு நாடுகளின் அரசியல்வாதிகளுக்கு பந்தம் பிடிப்பவர்கள் அதை உணரவேண்டும்.