அண்மையில் இடம்பெற்ற அமெரிக்க தேர்தலில் Democratic கட்சி அந்த நாட்டு காங்கிரஸில் 50% க்கும் குறைவான ஆசனங்களை வென்று இருந்ததால் இதுவரை House தலைமையில் இருந்த நான்சி பெலோஷி பதவி விலகியிருந்தார். அந்த இடத்துக்கு பெரும்பான்மை ஆசனங்களை வென்ற Republican கட்சி உறுப்பினர் ஒருவர் இன்று தெரிவு செய்யப்பட இருந்தது.
ஆனால் அந்த வாக்கெடுப்பு சுலபமாக அமையவில்லை. கட்சியிடம் போதியளவு வாக்குகள் இருந்தாலும் உட்கட்சி சண்டையால் Republican கட்சி House தலைவரை தெரிவு செய்ய முடியாது உள்ளது.
Kevin McCarthy என்ற Republican உறுப்பினரே அதிகமான வாக்குகளை கொண்டிருந்தாலும் அந்த கட்சிக்குள் சிலர் McCarthy க்கு வாக்களிக்க மறுத்தனர். அவர்கள் முதல் சுற்று வாக்கெடுப்பில் Biggs என்பவரையும், இரண்டாம் சுற்றில் Jordan என்பவரையும் முன்மொழிந்து வாக்களித்தனர். சிறுபான்மையான Democratic கட்சியிடம் போதிய வாக்குகள் இல்லை.
இங்கே நகைப்பு என்னவென்றால் இரண்டாம் சுற்றில் Matt Gates (Republican) என்பவர் Jim Jordan (Republican) என்பவரை முன்மொழிய, Jim Jordan கட்சி ஒற்றுமையை நாடி McCarthy யை முன்மொழிந்தார். மொத்தம் 19 Republican உறுப்பினர் McCarthy (Republican) க்கு வாக்களிக்க மறுக்கின்றனர்.
இதற்கு முன் House தலைமை பதவிக்கு 1923ம் ஆண்டே இரண்டாம் வாக்கெடுப்பு தேவைப்பட்டு இருந்தது. இம்முறை இரண்டாம் வாக்கெடுப்பும் தலைமையை தெரியவில்லை. அமெரிக்க அரசியல் மூன்றாம் உலக அரசியலிலும் கீழே செல்கிறது.
அமெரிக்க சாசனத்தில் House தலைவரை தெரிவு செய்ய வேறு வழி இல்லாதபடியால் வாக்கெடுப்பு தொடரும்.