ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததால் அதில் இருந்த திருகோணமலையை சார்ந்த 6 மீனவர்கள் 4 தினங்களாக கட்டுப்பாடு இன்றி இழுபட்டுள்ளனர். இவர்களை கண்ட வணிக கப்பல் ஒன்று இந்தியாவுக்கு அறிவித்து, ஆறு பேரும் காப்பாற்றப்பட்டு உள்ளனர்.
.
விசாகப்பட்டினம் நோக்கி சென்ற YM Summit என்ற வர்த்தக கப்பல் ஞாயிற்றுக்கிழமை மேற்படி 6 மீனவர்கள் கவிழ்ந்த படகில் உதவி தேடி இருப்பதை கண்டுள்ளது. உடனே அக்கப்பல் இந்தியாவின் Maritime Rescue Coordination Center க்கு அறிவித்தது. கவிழ்ந்த படகு சென்னைக்கு கிழக்கே சுமார் 170 கடல் மைல் தூரத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளது.
.
காப்பாற்றப்பட்ட ஆறு மீனவரும் ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் துறைமுகத்துக்கு எடுத்து செல்லப்படுவர். அங்கிருந்து அவர்கள் தமது வீடு திரும்புவர். அதற்கான பணிகளில் இந்தியாவும், இலங்கையும் இணைந்து செயல்படுகின்றன.
.