கல்முனை சுற்றிவளைப்புக்கு 15 பேர் பலி

Batticaloa

​சனிக்கிழமை​​ இலங்கையின் கிழக்கே உள்ள கல்முனை பகுதியில் விசேட அதிரடிப்படை​யினர் வீடு ஒன்றை​ சுற்றிவளை​த்த​ போது அவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. அதிரடி படையும் திருப்பி தாக்கியது. அப்போது மறைந்திருந்தவர் மத்தியில் குண்டுகளும் வெடித்தன. இறுதியில் ​அந்த வீட்டில் இருந்து ​மொத்தம் 15 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

.
சுற்றிவளைப்பில் இருந்த வீட்டுக்குள் இருந்து 3 ஆண் சடலங்களும், 3 பெண் சடலங்களும், 6 சிறுவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டன. மேலும் 3 தற்கொலைகாரர் என்று சந்தேகிக்கப்படுவோரின் சடலங்கள் வீட்டுக்கு வெளியே இருந்து மீட்கப்பட்டு உள்ளன.
.
போக்குவரத்தை கண்காணிக்கும் போலீசார் ஒருவர் வழங்கிய துப்பு ஒன்றின் காரணமாகவே இந்த மறைவிடம் சுற்றி வளைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
.
வெள்ளி இரவு முதல் கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை ஆகிய இடங்களில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ளது.
.