காசா யுத்தத்தை நிறுத்த கூறி அமெரிக்க பல்கலைக்கழக மாணவர் செய்யும் ஆர்ப்பாட்டங்கள் உக்கிரம் அடைய ஆரம்பித்துள்ளன. University of Southern California (USC) மே மாதம் 10ம் திகதி நிகழவிருந்த பட்டமளிப்பு விழாவையே இடைநிறுத்தி உள்ளது. விழாவில் வன்முறைகள் இடம்பெறலாம் என்று பயம் கொண்டுள்ளதாக USC கூறியுள்ளது.
இந்த பட்டமளிப்பில் சுமார் 35,000 பேர் பங்குகொள்ள இருந்தனர்.
தற்போது அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களை சிலர் அமெரிக்க பல்கலைக்கழகங்களின் வியட்நாம் யுத்தத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுடன் ஒப்பிடுகின்றனர்.
USC சுமார் 100 மாணவரை கைது செய்துள்ளது. Brown University 130 மாணவர்களை கைது செய்துள்ளது. Emory University (Georgia) 28 மாணவர்களை கைது செய்துள்ளது. Emerson University (Boston) 100 மாணவர்களை கைது செய்துள்ளது. Indiana University 33 மாணவர்களை கைது செய்துள்ளது. George Washington University ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவரை வேறு இடத்துக்கு நகர்த்த போலீஸ் உதவியை நாடியுள்ளது.
University of California (Los Angeles), Northeastern University (Boston), MIT, University of Texas (Austin), University of Michigan, University of New Mexico, University of California, Berkeley, Yale University, Harvard University ஆகியவற்றிலும் மாணவர் ஆர்ப்பாட்டம் தொடர்கின்றன.