கர்நாடக வித்துவான் பாலமுரளிகிருஷ்ணா மரணம்

BalaMuraliKrishna

கர்நாடக இசை வித்துவான் பாலமுரளிகிருஷ்ணா தனது 86ஆவது வயதில் இன்று செவ்வாய் சென்னையில் காலமானார். தனது கர்நாடக இசைதுறைக்கான சேவை காரணமாக இந்தியாவின் ‘பத்ம பூஷன்’ பட்டம் முதல் பல பட்டங்களை பெற்ற இவர் தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம், தமிழ் போன்ற பல மொழிகளில் தனது இசையை பரப்பியுள்ளார்.
.
கர்நாடக இசையில் மட்டுமன்றி இந்திய திரையுலகிலும் இவர் சேவை ஆற்றியுள்ளார். இவர் சுமார் 400 பாடல்கள் பாடியுள்ளதாக கூறப்படுகிறது. சில படங்களில் இவர் நடித்தும் உள்ளார். இவர் நடித்த முதலாவது திரைப்படம் 1967 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ‘பக்த பிரகலாத்’ ஆகும். அதில் இவர் நாரதராக நடித்து இருந்தார். பின்னர் இத்திரைப்படம் தமிழ், கன்னடம் போன்ற மொழிகளிலும் வெளிவந்திருந்தது.
.

1977 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘கவிக்குயில்’ என்ற தமிழ் திரைப்படத்தின் ‘சின்னக்கண்ணன் அழைக்கிறான்’ என்ற பாடல் மிகவும் பிரபல்யமான பாடல்களில் ஒன்று.
.