இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் இன்று சனிக்கிழமை மாநில தேர்தல் இடம்பெறுள்ளது. 2013 ஆம் ஆண்டு முதலமைச்சர் சீதாராமையா தலைமையில் அங்கு ஆட்சிக்கு வந்திருந்த காங்கிரஸ் கட்சி மொத்தம் 224 ஆசனங்களில் 121 ஆசனங்களை கைப்பற்றி இருந்தது. அனால் இன்றைய தேர்தலில் அக்கட்சி இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது.
.
.
இன்றைய தேர்தலில் பிரதமர் மோதி தலைமயிலான பாரதீய ஜனதா கட்சி (BJP) அதிக ஆசனங்களை கைப்பற்றலாம் என்று கருதப்படுகிறது. ஆனாலும் இவர்களும் மெரும்பான்மை ஆட்சியை அங்கு அடைய முடியாது என்று தேர்தலின் பின்னான கண்காணிப்புகள் கூறுகின்றன.
.
.
பாரதீய ஜனதா கட்சியோ அல்லது காங்கிரஸ் கட்சியோ பெரும்பான்மை பலத்தை அடையாவிடின், இவர்களுள் ஒன்று மாநில கட்சியான ஜனதா தல் (Janata Dal) கட்சியுடன் கூட்டு அரசு அமைக்கும் நிலைக்கு தள்ளப்படலாம்.
.
.
உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் இந்த மாதம் 15 ஆம் திகதி வெளிவரும். சுமார் 64 மில்லியன் மக்களை கொண்ட இந்த மாநிலத்தில், 49 மில்லியன் வாக்காளர்கள் உள்ளனர்.
.
.
இந்தியாவின் 29 மாநிலங்களில், 22 மாநிலங்கள் தற்போது மோதி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியே ஆட்சியிலேயே உள்ளன. கர்நாடக உட்பட 4 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் தற்போது ஆட்சியில் உள்ளது.
.