அண்மைக்காலங்களில் பலத்த தோல்விகளை அடைந்து வந்த காங்கிரஸ் கட்சி இந்தியாவின் கர்நாடகா மாநில தேர்தலில் இம்முறை பெரு வெற்றியை அடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பா.ஜ. ஆளும் கர்நாடகாவில் புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில் காங்கிரஸ் சுமார் 136 ஆசனங்களையும், பா.ஜ. 64 ஆசனங்களையும் வெல்லக்கூடும் என்று கணிப்புகள் கூறுகின்றன. அங்கு மொத்தம் 224 ஆசனங்கள் உள்ளன. வாக்கு எண்ணல் சனிக்கிழமை இடம்பெறுகிறது.
இங்கு தாம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக பிரதமர் மோதி 10 தினங்கள் வரை பல ஊர்வலங்களிலும், மேடை பேச்சுகளிலும் பங்கு கொண்டிருந்தார். ஆனாலும் கர்நாடகா பா.ஜ. கட்சியை இம்முறை ஆதரிக்கவில்லை என்று கணிப்புகள் கூறுகின்றன.
2019ம் ஆண்டின் பின் இதுவரை காங்கிரஸ் மொத்தம் 24 மாநிலங்களில் 1 மாநிலத்திலேயே ஆட்சியை அமைத்துள்ளது. கர்நாடகா தற்போது இரண்டாம் மாநிலமாகிறது. பா.ஜ தற்போது 15 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது.
மக்களின் தீர்ப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக முதலமைச்சர் பதவியை இழக்கும் பா.ஜ. கட்சியின் Basavaraj Bommai கூறியுள்ளார்.