கர்நாடகாவில் கலவரம், காவேரி காரணம்

Kavery

கடந்த சில நாட்களாக 100க்கும் அதிகமான தமிநாட்டுக்கு சொந்தமான பஸ்கள், லாரிகள் கர்நாடகாவில், குறிப்பாக பெங்களூரில், தீ மூட்டப்பட்டு உள்ளன. தொடர்ந்த கலவரங்களின் போது ஒரு கலகக்காரர் பொலிஸாரின் சூட்டுக்கு பலியாகியும் உள்ளார்.
.
அண்மையில் இந்தியாவின் Supreme Court கர்நாடகா மாநிலம் தமிழ்நாட்டுக்கு 15,000 சதுர அடி நீரை ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நாளும் காவேரி வழியே விடவேண்டும் என்று தீர்ப்பு கூறி இருந்தது. இதனால் கோபம் கொண்ட கர்நாடகா ஆர்ப்பாட்டக்காரர் தீ மூட்டும் செயலில் இறங்கி உள்ளனர்.
.
காவேரி கர்நாடகாவில் ஆரம்பித்து, தமிழ்நாடு ஊடாக சென்று, வங்கக்கடலில் வீழ்கிறது. கர்நாடகாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையேயான இந்த காவேரி நீர் முரண்பாடு சில நூற்றாண்டுகள் பழமையானது. இரு பகுதி அரசியல்வாதிகளும் இந்த விடயத்தை பயன்படுத்தி அரசியல் இலாபம் அடைவதுண்டு.
.
இரு தரப்பிலுமாக பல்லாயிரம் விவசாயிகள் காவேரி நீரை பயன்படுத்தி விவசாயம் செய்வதுண்டு.
.

மழை காலங்களில் மழை நீரை சேமியாது கடலுள் பாயவிட்டு, பின் வரட்சி காலங்களில் நீருக்காக மாநிலங்கள் முரண்படுவது இந்தியாவில் நீண்ட காலமாக இடம்பெறும் நிகழ்வு.
.