இந்தியாவின் Serum Institute தயாரிக்கும் கரோனா தடுப்பு மருந்தின் ஏற்றுமதியை குறைத்து, இந்தியாவுக்கு முன்னுரிமை வழங்கும்படி Serum நிறுவனம் கூறப்பட்டுள்ளது. இந்த உண்மையை Serum CEO Adar Poonawalla இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்து உள்ளார். ஆனால் யார் இந்த கட்டளையை அவர்களுக்கு அனுப்பியது என்று Poonawalla கூறவில்லை.
Dear countries & governments என்று தனது tweet பதிவில் விழித்த Poonawalla, தமது ஏற்றுமதியை குறைக்குமாறு directed என்றுள்ளார். அதனால் வெளிநாடுகளை பொறுத்திருக்கவும் கேட்டுள்ளார்.
உலகின் பல மருத்துவ நிறுவனங்களின் மருந்துகளை Serum குத்தகை அடைப்படையில் தயாரிக்கும். இந்த நிறுவனமே உலக அளவில் சுமார் 60% மருந்துகளை தயாரிக்கிறது. குறைந்த விலை காரணமாக Serum தயாரிக்கும் AstraZeneca கரோனா தடுப்பு மருந்தையே பல நடுத்தர மற்றும் வறிய நாடுகள் விரும்புகின்றன.
இந்தியாவின் மோதி அரசு 1.3 பில்லியன் இந்தியர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து ஏற்ற முயற்சிக்கிறது. ஆனால் இதுவரை சுமார் 1% இந்தியரே கரோனா தடுப்பு ஊசி ஏற்றப்பட்டு உள்ளனர்.