கரோனா வரைஸ் தாக்கத்தின் மத்தியிலும் இன்று வெள்ளிக்கிழமை (23/07/2021) பின்போடப்பட்ட Tokyo 2020 ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகி உள்ளன. இம்முறை போட்டிகளை நேரடியாக காண பார்வையாளர் எவரும் அனுமதிக்கப்படவில்லை. தொலைக்காட்சிகள் மூலமே போட்டிகள் ஆவலரை அடையும்.
ஆரம்ப விழாவின் வாணவேடிக்கையும் தொலைக்காட்சிக்கு பொருந்தும் வகையிலேயே இடம்பெற்றது. பங்குகொள்ளும் நாடுகளின் அணிவகுப்பும் 5,700 பேரை மட்டுமே கொண்டிருந்தது. 2016ம் ஆண்டு போட்டியில் 16,000 க்கும் அதிமானோர் அணிவகுத்து இருந்தனர்.
ஜூலை 1ம் திகதி முதல் ஒலிம்பிக் வளாகத்தில் மட்டும் 106 பேர் கரோனா தொற்றி இருந்தமை அறியப்பட்டுள்ளது. ஜெர்மன் சயிக்கிள் ஓட்ட வீரர் Simon Geschke யும் கரோனா தொற்றி உள்ளார்.
இம்முறை சுமார் 11,000 போட்டியாளர்கள் 339 பதக்கங்களுக்கு போட்டியிடுவர். மொத்தம் 33 வகையான விளையாட்டுக்கள் விளையாடப்படும்.
1800 drone கள் வானத்தில் ஒரு பூமியின் வடிவத்தை அமைத்து அழகுபடுத்தியது.
நூற்றுக்கணக்கான ஒலிம்பிக் எதிர்ப்பாளர் ஒலிம்பிக்கை நிறுத்தும்படி வெளியே ஆர்ப்பாட்டமும் செய்தனர்.
ஜப்பான் இந்த ஒலிம்பிக்கு சுமார் $15 பில்லியன் பணத்தை செலவிட்டிருந்தது. அதில் $2.6 பில்லியன் போட்டியை ஒருவருடம் பின்தள்ளியதற்கு செலவாகி இருந்தது.