2020ம் மற்றும் 2021ம் ஆண்டுகளில் கரோனாவுக்கு சுமார் 14.9 மில்லியன் பேர் பலியாகி இருக்கலாம் என்று World Health Organization (WHO) தற்போது கணிக்கிறது. முன்னர் 5.42 மில்லியன் பேரே பலியாகி இருந்ததாக WHO கூறி இருந்தது. அதாவது முன்னைய கணிப்பிலும் உண்மை மரணம் 2.7 மடங்கு அதிகம்.
WHO பொதுவாக ஒவ்வொரு நாடுகளின் தரவுகளை பயன்படுத்தியே உலக அளவிலான கணிப்புகளை செய்யும். அதன் நோக்கம் ஒரு வரலாற்று அனர்த்தத்தை சரியாக பதிவு செய்வதே. ஆனால் பல நாடுகள் அரசியல் நோக்கத்துக்காக தமது நாடுகளில் கரோனாவுக்கு பலியானோர் தொகையை குறைத்து பதிந்துள்ளன.
John Hopkins பல்கலைக்கழக கணிப்பு தற்போது 6.2 மில்லியன் மக்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளதாக கூறுகிறது. அதன் கணிப்பும் ஒவ்வொரு நாடுகளும் வழங்கும் தரவுகளை அடிப்படியாக கொண்டது.
இந்தியா 481,000 இந்தியர் கரோனாவுக்கு பலியானதாக பதிவு செய்துள்ளது. ஆனால் உண்மை அத்தொகை சுமார் 4.74 மில்லியன் என்கிறார் William Msemburi என்ற WHO அதிகாரி. WHO வின் கணிப்பை மறுத்துள்ளது இந்தியா.
WHO கணிப்புப்படி:
எகிப்தின் உண்மை கணிப்பு அரச தரவுகளிலும் 11.6 மடங்கு அதிகம்
இந்தியாவின் உண்மை கணிப்பு அரச தரவுகளிலும் 9.9 மடங்கு அதிகம்
பாகிஸ்தானின் உண்மை கணிப்பு அரச தரவுகளிலும் 8 மடங்கு அதிகம்
இந்தோனேசியாவின் உண்மை கணிப்பு அரச தரவுகளிலும் 7.1 மடங்கு அதிகம்
பங்களாதேசத்தின் உண்மை கணிப்பு அரச தரவுகளிலும் 5 மடங்கு அதிகம்
பொலிவியாவின் உண்மை கணிப்பு அரச தரவுகளிலும் 4.5 மடங்கு அதிகம்
சேர்பியாவின் உண்மை கணிப்பு அரச தரவுகளிலும் 4.4 மடங்கு அதிகம்
கசகஸ்தானின் உண்மை கணிப்பு அரச தரவுகளிலும் 4.2 மடங்கு அதிகம்
பிலிப்பீனின் உண்மை கணிப்பு அரச தரவுகளிலும் 3.6 மடங்கு அதிகம்
ரஷ்யாவின் உண்மை கணிப்பு அரச தரவுகளிலும் 3.5 மடங்கு அதிகம்
உலக அளவில் கரோனா மரண தொகை தற்போது 5ம் இடத்தில உள்ளது. Black Death 75 முதல் 200 மில்லியன் வரையானோரை பலியாக்கி முதலாம் இடத்தில் உள்ளது. Influenza (Spanish flu) 17 முதல் 100 மில்லியன் வரையானோரை பலியாக்கி இரண்டாம் இடத்தில் உள்ளது.