கரோனா வைரஸ் பரவல் காரணமாக கனடாவின் Calgary மிருக காட்சி சாலையில் உள்ள பன்டாகள் (panda) விரும்பி உண்ணும் மூங்கிலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அதனால் வேறு வழியின்றி Calgary காட்சி சாலையில் உள்ள இரண்டு பன்டாக்களும் மீண்டும் சீன செல்லவுள்ள.
.
போக்குவரத்துகள் தடைபட்ட காரணத்தால் கனடா வேறு இடங்களில் இருந்து மூங்கிலை பெற்று இருந்தாலும் Er Shun, Da Mao ஆகிய இரண்டு பன்டாக்களும் அவற்றை உண்ண மறுத்துவிட்டன. வேறு இடங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட மூங்கில் பன்டா விரும்பி உண்ணும் வகையானது அல்ல.
.
கரோனாவுக்கு முன்னர் மேற்படி பன்டாக்களுக்கு தேவையான மூங்கில் சீனாவில் இருந்தே எடுத்துவரப்பட்டது. சராசரியாக ஒவ்வொரு பன்டாவுக்கும், ஒவ்வொரு நாளும் சுமார் 40 kg மூங்கில் தேவை.
.
மேற்படி பன்டாக்கள் இரண்டும் 2013 ஆம் ஆண்டு, 10-ஆண்டு குத்தகை அடிப்படையில் கனடா சென்று இருந்தன. முதல் 5 ஆண்டுகள் அவை Toronto நகரில் இருந்தன. அவற்றின் குட்டிகளான Jia Panpan னும், Jia Yueyue யும் ஏற்கனவே சீனா சென்றுள்ளன.
.
பன்டாக்களை சீன குத்தகை அடிப்படையில் மட்டுமே மற்றைய நாடுகளுக்கு வழங்கும். குத்தகை முடிவில் அவை மீண்டும் சீனாவுக்கு செல்லும். அத்துடன் வெளிநாடுகளில் பிறக்கும் குட்டிகளும் சீனாவின் சொத்தே. அதனால் குட்டிகளும் கூடவே சீனா செல்லும்.
.
சீனாவின் 58 பன்டாக்கள் குத்தகை அடிப்படையில் 17 நாடுகளில் உள்ளன. இவை அனைத்தும் சீனாவின் Sichuan மாநிலத்தில் உள்ள Chengdu Research Base of Giant Panda Breeding அமைப்பின் கண்காணிப்பில் உள்ளன.
.