இந்தியாவின் இரண்டாம் கரோனா அலை முதலாவது அலையிலும் மடங்குகள் அதிகமாக உள்ளது. அந்த பளுவால் இந்தியாவின் வைத்திய சேவை முறியும் நிலையில் உள்ளது. இன்று புதன்கிழமை மட்டும் மேலும் 295,041 பேருக்கு கரோனா தொற்றி உள்ளமை அறியப்பட்டுள்ளது. அதேதினம் 2,023 பேர் கரோனாவுக்கு பலியாகியும் உள்ளனர்.
பல இடங்களில் கரோனா நோயாளிகளுக்கு தேவையான oxygen தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வைத்தியசாலை கட்டில்களும் சுமார் 100% வரை நிரம்பி உள்ளன. நோயாளிகள் கட்டில் அனுமதிக்கு கிழமைகளுக்கு பொறுத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது என்கிறார் இந்தியாவின் Center for Disease Dynamics, Economics and Policy அதிகாரி.
புதன்கிழமை மட்டும் மகாராஷ்ரா மாநிலத்தில் 22 கரோனா நோயாளிகள் oxygen இல்லாத காரணத்தால் மரணித்து உள்ளனர் என்று கூறப்படுகிறது. தற்போது அந்த மாநிலத்தில் தினமும் 1,550 தொன் oxygen தேவைப்படுவதாகவும், ஆனால் அந்த மாநிலம் தினமும் 1,250 தொன்னை மட்டுமே தயாரிக்கும் வசதியை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மிகுதி oxygen வேறு மாநிலங்களில் இருந்து பெறப்படுகிறது.
கரோனா மருந்து போதிய அளவில் இல்லாத காரணத்தால் பலர் Remdesivir என்ற மருந்தை தற்காலிகமாக பயன்படுத்துகின்றனர். இந்திய அரசும் அந்த மருந்துக்காக ஏற்றுமதியை தற்காலிகமாக தடை செய்துள்ளது. வளமையாக இந்த மருந்தின் விலை $200 வரையில் இருந்தாலும், தற்போது மத்திய அரசின் தலையீடு காரணமாக $47 வரைக்கு குறைக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் அதற்கு black market ஏற்பட்டு விலையும் அதிகரித்து உள்ளது.
கங்கையோரம் இடம்பெற்ற கும்பமேளா நிகழ்வும் கரோனா வேகமாக பரவ காரணம் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் எல்லா பாகங்களிலும் இருந்து பல மில்லியன் இந்துக்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். இந்துவாத பிரதமர் மோதி முதலில் கும்பமேளா நிகழ்வு தொடர்பாக கருத்து எதையும் கூறவில்லை, ஆனால் சனிக்கிழமை பத்தர்கள் கும்பமேளா கூட்டத்தை தவிர்க்குமாறு கூறியுள்ளார்.
அண்மையில் இந்தியாவில் இடம்பெற்ற தேர்தல் கூட்டங்களும் கரோனா பரவலுக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.