கம்போடியாவிலிருந்து 250 இந்திய தொழில்நுட்ப ஊழியர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தூரகிழக்கில் தொழில்நுட்ப துறை தொழில் தருவதாக கூறி அழைத்து பின் அவர்களை அடைத்து வைத்து இணையம் மூலமான குற்றச்செயல்களுக்கு (cyber crime, online scams) பயன்படுத்தி உள்ளனர்.
கடத்தப்பட்ட ஒருவருக்கு பெண் ஒருவரின் படங்களை வழங்கி அவற்றை பயன்படுத்தி Facebook போன்ற கணக்குகளை ஆரம்பித்து பலரிடம் பணம் பறிக்க வைத்துள்ளனர். சிலரை வரி திணைக்கள அதிகாரிகளாக நடிக்க வைத்து பணம் பறித்துள்ளனர்.
2023ம் ஆண்டு ஐ. நா. வெளியிட்ட அறிக்கை ஒன்றின்படி பர்மாவில் 120,000பேரையும், கம்போடியாவில் 100,000 பேரையும் இவ்வாறு தடுத்து வைத்து இணைய குற்றங்களுக்குபயன்படுத்தி உள்ளனர்.
தற்போது இங்கு சுமார் 5,000 இந்தியர்கள் அகப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.