அமெரிக்காவின் Maryland மாநிலத்து Baltimore நகரினூடு ஓடும் Patapsco என்ற ஆற்றில் சென்ற கொள்கலன் காவும் பெரியதோர் கப்பல் Francis Scott Key Bridge என்ற பாலத்தில் மோதியதால் பாலம் முற்றாக உடைந்து விழுந்துள்ளது.
உள்ளூர் நேரப்படி செவ்வாய் அதிகாலை 1:30 மணிக்கு (1:30 ET) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த பாலம் 1.6 மைல் நீளமானது, 4 lane களை கொண்டது.
அப்போது பாலத்தில் சென்ற வாகனங்கள் ஆற்றில் விழுந்துள்ளன. இழப்புகளின் விபரம் இதுவரை அறியப்படவில்லை.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட 300 மீட்டர் நீளமான Dali என்ற இந்த கப்பல் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை நோக்கி பயணித்தது.