கனவில் விழுங்கிய மோதிரம் நிசமாக வயிற்றுள்

California

Jenna Evans என்ற 29 வயது அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்து பெண் வேகமாக செல்லும் ரயில் ஒன்றில் பயணிக்கையில், திருடர்களிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் தனது engagement மோதிரத்தை விழுங்கி உள்ளார்.
.
மறுநாள் எழுந்த அந்த பெண் தனது விரலில் மோதிரம் இல்லாமையை அறிந்துள்ளார். அப்போதே அப்பெண் ரயில் விவகாரம் ஒரு கனவு என்பதையும், மோதிரத்தை விழுங்கியது நிசம் என்பதையும் உணர்ந்துள்ளார்.
.
உடனே வைத்தியசாலை சென்ற அப்பெண் X-ray மூலம் தனது வயிற்றுள் 2.4 கரட் மோதிரம் உள்ளதை அறிந்துள்ளார். வைத்தியர் அந்த மோதிரம் இயற்கையாக வெளியேறும் அதுவரை காத்திரு என்று கூறியுள்ளனர்.
.
Sleep walking இயல்பு கொண்டோர் நித்திரையில் நிசமான செயல்களை செய்வதுண்டு.
.