உலக அளவில் அதிகம் hedge fund முதலீட்டை கொண்ட வங்கி கனடாவின் TD Bank (Toronto Dominion Bank, TD.TO) என்று அறியப்படுகிறது. TD வங்கியின் பங்குச்சந்தை பங்கில் சுமார் $3.7 பில்லியன் hedge fund முதலீடுகளில் உள்ளது என்று அறியப்படுகிறது.
இரண்டாவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் JP Morgan பங்குகளில் $2.3 பில்லியன் பங்குகளே hedge fund முதலீடுகளில் உள்ளது.
ஒரு நிறுவனத்தின் பங்கின் விலை வீழ்ச்சி அடைய உள்ளது என்று கருதும் பொழுதே hedge fund முதலீட்டாளர் அந்த நிறுவனத்தில் முதிலீடு செய்வர். பங்கின் விலை உயர்வாக இருக்கும் காலத்தில் ஒரு தொகை பங்கை கடனாக பெற்று, அதை விற்று பணம் பெறுவார். பின் அந்த பங்கு விலை குறைய, குறைந்த விலைக்கு பங்கை கொள்வனவு செய்யது கடன் பெற்ற பங்கை அடைப்பர்.
TD Bank அமெரிக்காவின் First Horizon Corp என்ற வங்கியை $13.4 பில்லியனுக்கு கொள்வனவு செய்யவும் உள்ளது. இந்த கொள்வனவை சில பங்காளர் விரும்பவில்லை.
கனடாவின் TD Bank அமெரிக்காவின் First Horizon Corp வங்கியை கொள்வனவு செய்தால், அது அமெரிக்காவின் 6 ஆவது பெரிய வங்கி ஆகும்.