கனடிய பிரதமர் ரூடோ (Justin Trudeau) தனது பதவியில் இருந்து விலகுவதாக இன்று திங்கள் அறிவித்துள்ளார். உட்கட்சி நெருக்கடி காரணமாகவே இவர் பதவி விலகியுள்ளார்.
கடந்த சில இடைக்கால தேர்தல்களில் இவரின் Liberal கட்சி படுதோல்வி அடைந்து இருந்தது. தற்போதைய கருத்து கணிப்பின்படி Liberal கட்சி 3ம் இடத்தில் உள்ளது.
ரூடோ 9 ஆண்டுகள் பிரதமர் பதவியில் இருந்தாலும் இவர் தனது தந்தையார் போல ஒரு திடமான அரசியலை கடைபிடிக்கவில்லை. மகனின் அரசியல் விரைவில் மறக்கப்படும், ஆனால் தந்தையின் அரசியல் மறக்கப்படாது.
இந்தியாவில் சேலை வழங்கி அரசியல் ஆதரவு பெறுவது போல் ரூடோ சில்லறை வழங்கி (C$ 250) ஆதரவு பெற முனைந்தார். அச்செயலை அவரின் நிதி அமைச்சர் Chrystia Freeland தனது பதவி விலகல் கடிதத்தில் “political gimmicks” என்று விபரித்து இருந்தார்.