சீக்கிய பிரிவினை வாதியான கனேடிய சீக்கியர் ஒருவர் கனடாவின் British Columbia மாநிலத்தில் ஜூன் 18ம் திகதி சுட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். Hardeep Singh Nijjar, வயது 45, என்ற சீக்கியரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இவரின் கொலை Guru Nanak Sikh Gurdwara என்ற சீக்கிய ஆலயம் ஒன்றின் கார் தரிப்பு இடத்திலேயே நிகழ்ந்தது. இவர் இந்தியாவில் காலிஸ்தான் என்ற தனி நாட்டை உருவாக்க இயங்குபவர்.
இவரை யார் கொலை செய்தார் என்பதை கனடிய போலீசார் இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால் அவரின் கொலையில் இந்தியா தொடர்பை கொண்டிருக்கலாம் என்று கனேடிய பிரதமர் ரூடோ திங்கள் கூறியுள்ளார்.
கனடிய பிரதமரின் கூற்று இந்தியாவுடனான பகையை மேலும் உக்கிரம் அடைய செய்யும்.
இந்த விசயத்தில் சீனாவுடன் ஏற்கனவே முரண்படும் அமெரிக்காவோ அல்லது ஐரோப்பிய நாடுகளோ கனடாவுக்கு உதவியாக இருக்கப்போவதில்லை. இந்தியாவுடனான இராணுவ, வர்த்தக உறவுகள் அவர்களுக்கு பிரதானம்.
இந்திய தூதரக அதிகாரியான Pavan Kumar Rai என்பரையும் கனடா திங்கள் வெளியேற்றி உள்ளது.
கனடாவில் சுமார் 1.8 மில்லியன் சீக்கியர் உள்ளதாக கூறப்படுகிறது. புஞ்சாப்புக்கு வெளியே இதுவே அதிக சீக்கிய குடியிருப்பு.