கனடியாருக்கு விசா வழங்கலை இந்தியா நிறுத்தம்

கனடியாருக்கு விசா வழங்கலை இந்தியா நிறுத்தம்

கனடியாருக்கு விசா வழங்குவதை இந்தியா தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளது. கனடாவில் உள்ள இந்திய தூதுவர் பணியாகங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதியே விசா வழங்கும் பணிகளை நிறுத்தியதாக இந்தியா கூறியுள்ளது. ஆனால் தற்போது மூன்றாம் நாடுகளில் உள்ள கனடியருக்கும் விசா வழங்கப்பட வழங்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு தற்போது மிகவும் முறிந்து உள்ளது. குறிப்பாக Hardeep Singh Nijjar என்ற சீக்கியர் பிரிவினைவாதி கனடாவில் சுட்டு கொலை செய்யப்பட்டமையும், அதன் பின்னணியில் இந்தியா உள்ளதாக ரூடோ கூறியமையும் பிரதான காரணம்.

2022ம் ஆண்டில் கனடிய மாணவ விசாக்களை மட்டும் 320,000 இந்திய மாணவர்கள் பெற்று கனடா சென்றுள்ளனர் என்றும், அது கனடாவில் உள்ள வெளிநாட்டு மாணவர் தொகையின் 40% என்றும் கூறப்படுகிறது.

2021ம் ஆண்டு 80,000 கனடியர்கள் இந்தியாவுக்கு சுற்றுலா விசா பெற்று சென்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் கனடா இந்தியர்களுக்கு விசா வழங்குவதை தற்போதும் தொடர்கிறது.