பியோனா என்ற சூறாவளி (Hurricane Fiona) கனடாவின் கிழக்கு பகுதிக்கு வரலாறு காணாத மழையை பொழிய உள்ளது. இந்த தாழ் அமுக்கம் தற்போது Halifax நகருக்கு தெற்கே சுமார் 900 km தூரத்தில் நிலைகொண்டுள்ளது. சனிக்கிழமை இது Nova Scotia மாநிலத்தை தாக்கும்.
பியோனா கனடாவின் கிழக்கே 936 millibars வரையான தாழ் அமுக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது. இதுவரை 1970ம் ஆண்டு இடம்பெற்ற 940 millibars அமுக்கமே கனடாவில் பதியப்பட்ட அதிகுறைந்த தாழ் அமுக்கமாகும்.
இப்பகுதிகளில் காற்று வீச்சு சுமார் 185 km/h வரையாக அதிகரிக்கும். சில இடங்களில் 100 mm வரையிலான மழை வீழ்ச்சி இடம்பெறும். கடலில் அலைகளின் உயரம் 12 மீட்டர் வரை அதிகரிக்கும்.
1978ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ம் திகதி மட்டக்களப்பு பகுதியை தாக்கி பெரும் சேதத்துக்கு காரணமான சூறாவளி 938 millibars தாழ் அமுக்கத்தை கொண்டிருந்தது. இதன் உச்ச காற்று 220 km/h ஆக இருந்தது.
கடல் மட்டத்தில் காணப்படும் வளி அமுக்கம் 1 atm (ஒரு atmospheric அமுக்கம்) ஆகும். அதாவது கடல் மட்டத்தில் உள்ள ஒரு சதுர அலகு பரப்பில் அதற்கு மேலே விண்வெளி வரை உள்ள வளியின் பாரம் ஏற்படுத்தும் அமுக்கம் 1 atm ஆகும். இந்த அமுக்கத்தை மில்லிபார்ஸ் (millibars), கிலோ பஸ்கால் (kPa, kilo pascals), inch Hg, psi (pound per square inch) ஆகிய அலகுகள் மூலமும் குறிப்பிடலாம்.
1 atm = 1,013.25 millibars = 101.325 kPa = 29.9212 inch Hg = 14.696 psi