கனடாவின் மிகப்பெரிய மாகாணமான ஒன்றாரியோவில் (Ontario) 2013ம் ஆண்டு மொத்தம் 242 மரணித்த உடல்களே உறவினரால் பொறுப்பு ஏற்கப்படாது வைத்தியசாலைகளில் கைவிடப்பட்டு இருந்தன என்றும் ஆனால் 2023ம் ஆண்டில் அத்தொகை 1,183 ஆக உயர்ந்துள்ளது என்றும் மாநிலத்தின் மரண விசாரணை அதிகாரி (coroner) Dirk Huyer தெரிவித்து உள்ளார்.
Quebec மாநிலத்தில் 2023ம் ஆண்டு 66 ஆக இருந்த இத்தொகை 2013ம் ஆண்டு 183 ஆக அதிகரித்து உள்ளது. Alberta மாநிலத்தில் இத்தொகை அதே காலத்தில் 80 இல் இருந்து 200 ஆக அதிகரித்து உள்ளது.
உறவினருக்கு அறிவிக்கப்பட்டு இருந்தும் அவர்கள் உடல்களை பொறுப்பு ஏற்க முன் வராமைக்கு அதிகரித்த பண செலவு ஒரு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு செலவு 24% அளவு காரணமாக இருந்துள்ளது. இங்கு தற்போது சராசரி மரண வீட்டு செலவு C$8,800 ஆக உள்ளது.
Ontario மாநிலத்தில் ஒரு உடல் 24 மணித்தியாலத்தில் பொறுப்பு ஏற்கப்படாவிடில் அது கைவிடப்பட்ட உடல் ஆகும். சில தொண்டர் நிறுவனம் அல்லது நகரம் அவற்றை குறைந்த செலவில் அடக்கம் செய்யும்.
இங்கு சராசரியாக புதைக்கும் இடம் ஒன்றுக்கு மட்டும் C$2,800 செலவாகும் ஆனால் Toronto நகரின் சில பாகங்களில் இத்தொகை C$34,000 வரையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஓரிரு பிள்ளைகளை கொண்டிருப்பது, அல்லது குழந்தைகள் எதுவும் இல்லாது வாழ்வதும் இறுதியில் இப்படி முடிய காரணம் ஆகலாம். ஆனால் இந்த காரணத்தை அரசியல்வாதிகள் அதிகம் பேச்சில் எடுக்கார்.