கட்டுநாயக்க Terminal 2 கட்டுமானம் கைவிடப்படும்?

கட்டுநாயக்க Terminal 2 கட்டுமானம் கைவிடப்படும்?

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் கட்டப்படும் புதிய Terminal 2 வேலைகள் நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த கட்டுமான வேலைகளை செய்யும் ஜப்பான் நிறுவனமான Taisei கட்டுமானத்தை நிறுத்த அனுமதி கேட்டுள்ளது. இந்த கட்டுமானத்துக்கான பணம் கிடைக்கவில்லை என்று காரணம் கூறுகிறது Taisei.

பணம் கிடைக்க வழி செய்தால் மட்டுமே தாம் வேலைகள் தொடர முடியும் என்கிறது Taisei. அத்துடன் வேலைகளை செய்வதற்கு தேவையான சூழ்நிலையும் அவசியம் என்கிறது Taisei.

புதிய Terminal 2 கட்டிடத்தையும் பழைய Terminal 1 கட்டிடத்தையும் இணைக்க ஒரு viaduct பாதையையும் கட்டும் உரிமையை Taisei 2020ம் ஆண்டு வென்று இருந்தது. இந்த திட்டத்துக்கு சுமார் $460 மில்லியன் செலவிடப்பட இருந்தது.

மேற்படி முதலீட்டை Japan International Cooperation Agency (JICA) இலங்கையின் Airport and Aviation Services திணைக்களத்துக்கு வழங்க இருந்தது. இந்த கட்டுமான வேலைகள் 2023ம் ஆண்டில் நிறைவுபெற இருந்தது.

Taisei நிறுவனம் முன்னாள் அமைச்சர் Nimal Siripala de Silva வுக்கு இலஞ்சம் வழங்கி இருந்தது என்று ஒரு குற்றச்சாட்டை சஜித் பிரேமதாச சில கிழமைகளுக்கு முன் பாராளுமன்றத்தில் அறிவித்து இருந்தார். Taisei இந்த குற்றச்சாட்டை மறுத்து இருந்தது. இதை தற்போது 3 பேர் கொண்ட இலங்கை குழு ஒன்று விசாரணை செய்கிறது.

Taisei உட்பட சுமார் 180 ஜப்பான் நிறுவனங்கள் இலங்கையில் இயங்குகின்றன என்கிறது Teikoku Databank.