இலங்கையின் தெற்கு கடலில் மிதந்த போத்தல்களில் இருந்த திரவத்தை மதுபானம் என்று கருதி அருந்திய 3 மீனவர் மரணமாகினர். மேலும் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
மாத்தறைக்கு கிழக்கே உள்ள தங்கல்ல (Thangalle) என்ற இடத்தில் இருந்து சென்ற Devon என்ற வள்ளத்தில் சென்றவர்களே மரணித்து உள்ளனர்.
இவர்கள் கரையில் இருந்து சுமார் 590 km தூரத்தில் நிலைகொண்டுள்ளதால் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமே அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
இவர்கள் சில போத்தல்களை இன்னோர் வள்ளத்தினருக்கும் வழங்கியதால் அவர்களையும் மேற்படி திரவத்தை அருந்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவர்களை கரைக்கு எடுக்கும் முயற்சியில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது.