அடுத்த 100 முதல் 200 வருடங்கள் வரையான காலத்துள் உலக கடல்மட்டம் ஒரு மீட்டர் அளவில் அதிகரிக்கும் என்று கணிக்கிறது நாசா (NASA). அப்போது Tokyo, சிங்கப்பூர் போன்ற நகரங்களின் பாகங்கள் கடலுள் முற்றாக அமிழ்ந்து இருக்குமாம். மாலைதீவின் அதியுயர் பகுதி கடல் மட்டத்தில் இருந்து 2.4 மீட்டர் உயரத்திலேயே உள்ளது. அமெரிக்காவின் Florida போன்ற பகுதிகளும் பெருமளவில் அமிழ்ந்து இருக்குமாம்.
.
உலக சனத்தொகையில் 150 மில்லியன் மக்கள் கடல்மட்டத்தில் இருந்து 1 மீட்டர்க்கும் பதிவான நிலங்களிலேயே குடியுள்ளனர்.
.
உலக சனத்தொகையில் 150 மில்லியன் மக்கள் கடல்மட்டத்தில் இருந்து 1 மீட்டர்க்கும் பதிவான நிலங்களிலேயே குடியுள்ளனர்.
.
இவ்வாறு கடல்மட்டம் உயர்வதற்கு மூன்று காரணங்கள் நாசாவினால் முன்வைக்கப்பட்டுள்ளது. அவை கடல் நீர் வெப்பம் அதிகமாதல் (அதனால் கனவளவு அதிகரித்தல்), துருவ glacier பனி உருகுதல், மலைகளில் உள்ள glacier பனி உருகுதல் என்பனவாகும். (பல்லாண்டு snow பார அழுத்தம் காரணமாக இறுகி திண்மம் ஆகும்போது glacier (கிளேசியர்) உருவாகிறது. ஆனால் ice திரவ நிலையில் உள்ள நீர் திண்மம் ஆகும் போது உருவாகுவது.)
.
.
1992 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை மட்டும் கடல்மட்டம் 8 cm உயர்ந்துள்ளது என்கிறது நாசா.
.