பிரான்சின் சனாதிபதி இமானுவேல் மக்ரான் நடைமுறை செய்யும் ஓய்வூதிய வயதெல்லை அதிகரிப்பை எதிர்த்து வீதிகளில் வன்முறைகள் வெடித்துள்ளன. இன்று வெள்ளி மாலையும் பல இடங்களில் வீதி போராட்டங்கள் தொடர்கின்றன. போலீசார் கண்ணீர் புகை கொண்டு கலகத்தை அடக்க முனைகின்றனர்.
ஓய்வூதிய வயது அதிகரிப்பை பாராளுமன்றம் மூலம் செய்யாது, மக்ரான் தன்னிச்சையாக நடைமுறை செய்தது கடந்த சில நாட்களாக இடம்பெறும் வன்முறைகளை உக்கிரம் அடைய செய்துள்ளது.
அங்கு வேலை புறக்கணிப்பு காரணமாக வீதிகளில் குப்பைகள் குவிந்து வருகின்றன.
தற்போது 62 ஆக இருக்கும் ஓய்வூதிய வயது எல்லையை 64 வயதாக அதிகரிப்பதையே போராட்டக்காரர் எதிர்க்கின்றனர். வளர்ச்சி அடைந்த நாடுகளில் 62 வயது ஓய்வூதியத்துக்கு மிக குறைந்த வயதாகும்.
சில நாடுகளில் சராசரியாக ஓய்வூதியம் ஆரம்பிக்கும் ஆண்டு, வாழ்க்கை காலம் (life expectancy), ஓய்வூதியம் பெறும் காலம்: