ஒலிம்பிக் போட்டியை குழப்பும் அழுக்கான பாரிஸ் ஆறு

ஒலிம்பிக் போட்டியை குழப்பும் அழுக்கான பாரிஸ் ஆறு

தற்போது பாரிஸ் நகரில் இடம்பெறும் 2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் ஒன்றான triathlon போட்டி புதன்கிழமைக்கு பின் போடப்பட்டுள்ளது. இந்த போட்டி இடம்பெற இருந்த Seine என்ற ஆறு அழுக்காக உள்ளமையே பின் போடலுக்கு காரணம்.

பாரிஸ் நகரினூடு செல்லும் இந்த ஆற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அளவு E. coli கிருமிகள் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களாக அங்கு பெய்த மழை ஆறை மேலும் அழுக்காக்கி உள்ளது.

ஒலிம்பிக் போட்டிக்கு முன் $1.5 பில்லியன் செலவில் இந்த ஆறு சுத்தம் செய்யப்பட்டது. போட்டி ஆரம்பமாக முன் பாரிஸ் நகர தலைவி இந்த ஆற்றில் நீந்தி ஆறு  சுத்தமானது என்று நிரூபிக்க முயன்றார்.

சுமார் 100 ஆண்டுகளாக இந்த ஆற்றில் நீந்துவது தடை செய்யப்பட்டிருந்தது.

Triathlon போட்டியாளர் முதலில் 1.5 km நீந்தி, தொடர்ந்து 40 km சைக்கிள் ஓடி, தொடர்ந்து 10 km தூரம் காலால் ஓடி முடிப்பர்.

தற்போது முன் உள்ள நாடுகள் வருமாறு: