Qing Wang என்ற Cleveland Clinic Foundation (Cleveland, Ohio) அமைப்பின் மருத்துவ ஆய்வாளர் புதன்கிழமை அமெரிக்காவின் FBI போலீசாரால் கைது செய்யப்பட்டு நேற்று வியாழன் நீதிமன்றம் ஒன்றில் நிறுத்தப்பட்டு இருந்தார். இவர் அமெரிக்காவின் நிதி உதவியுடன் செய்யும் ஆய்வுகளுக்கு சீனாவிடம் இருந்தும் நிதி பெற்றுள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
.
சீனாவில் பிறந்த Wang தற்போது ஒரு அமெரிக்க குடிமகன். இவர் தான் மேற்கொண்ட ஆய்வு ஒன்றுக்கு அமெரிக்காவின் National Institutes of Health (NIH) என்ற அமைப்பிடம் இருந்து $3.6 மில்லியன் grants பெற்றுள்ளார். பின்னர் அதே ஆய்வுக்கு சீனாவின் Huazhong University மூலமும் grants பெற்றுள்ளார்.
.
Wang கின் செயல்பாடு உண்மைகளை மறைத்து பெரு இலாபம் அடையும் நோக்கம் கொண்ட குற்றமா அல்லது தெரிந்தே செய்து கொண்ட உளவு குற்றமா என்பதை நீதிமன்றம் அறிய உள்ளது. இவரின் செயல்பாடுகள் உளவு என்று வாதிடவுள்ளது FBI. Wang தனக்கும் Huazhong பல்கலைக்கழகத்துக்கு இடையிலான தொடர்பை அமெரிக்காவின் NIH அமைப்புக்கு மறைத்து உள்ளார்.
.
Wang மட்டுமன்றி வேறு பல அமெரிக்காவில் வதியும் சீன ஆய்வாளர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
.
Dr. XiaoJiang Li என்ற முன்னாள் Emory University (Atlanta, Georgia) விரிவுரையாளர் தான் சீன பல்கலைக்கழகங்களில் இருந்து பெற்ற மானியங்களை அமெரிக்க வருமான வரியில் குறிப்பிடாத குற்றத்தை அண்மையில் ஏற்றுக்கொண்டு இருந்தார்.
.
Dr. Simon SawTeong Ang என்ற University of Arkansas விரிவுரையாளரும் சீனாவிடம் இருந்து பெற்ற வருமானங்களை அமெரிக்க வருமான வரியில் குறிப்பிடாது மறைத்தமைக்காக கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் தமது ஆய்வுகளுக்கு NASA அமைப்பிடம் இருந்தும் grants பெற்று உள்ளார்.
.
இவர்கள் அனைவரும் 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சீனாவின் Thousand Talents Plan (TTP) என்ற ஆய்வு திட்டத்தின் உறுப்பினர் என்கிறது அமெரிக்காவின் FBI.
.
அதேவேளை சீனாவில் தங்கி இருந்து சீன பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பல மேற்கு நாட்டு விரிவுரையாளர்களும் TTP யில் அங்கம் கொண்டுள்ளனர். அவர்கள் சீன அரசிடம் இருந்து தமது ஆய்வுகளுக்கு பரிசுகளும் பெற்றுள்ளனர்.
.