சென்ற ஜூன் மாதம் 9ம் திகதி Bitcoin ஒன்றின் பெறுமதி சுமார் $69,000 ஆக இருந்தது. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் Bitcoin ஒன்றின் பெறுமதி சுமார் $43,000 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி Bitcoin ஒன்றின் பெறுமதி கடந்த ஒரு மாதத்தில் சுமார் 38% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது.
குறிப்பாக கடந்த இரண்டு தினங்களில் Bitcoin பாரிய வீழ்ச்சியை அடைந்துள்ளது. வெள்ளிக்கிழமை சுமார் 13% ஆலும் , சனிக்கிழமை மேலும் 17% ஆலும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
Ether என்ற இன்னோர் cryptocurrency யும் (அல்லது crypto) கடந்த 24 மணி நேரத்தில் 10% வீழ்ச்சியை அடைந்துள்ளது.
பெருமளவு crypto உரிமையாளர் தமது wallet களில் இருந்த crypto களை விற்பனை செய்வதற்கு வசதியாக crypto exchange களுக்கு நகர்த்தி இருந்திருந்தனர். அவ்வாறு பெருமளவு crypto சந்தைக்கு வந்தமையும் crypto வின் பெறுமதி விழ காரணம்.
அத்துடன் டிசம்பர் 8ம் திகதி Coinbase Global, FTX Trading ஆகிய இரண்டு பெரிய crypto வர்த்தக நிறுவனங்கள் அமெரிக்காவின் காங்கிரசுக்கு சென்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் கூறவுள்ளனர். இவர்கள் கூறும் பதில்கள் எவ்வாறு அமெரிக்கா crypto வை சட்டப்படி கையாளும் என்பதை தீர்மானிக்கும்.
தற்போது பல நாடுகள் crypto வர்த்தகத்தை தடை செய்துள்ளனர்.