Daraprim என்ற மருந்து அமெரிக்காவில் கடந்த 62 வருடங்களாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மருந்தை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை Turing Pharmaceuticals என்ற பிறிதொரு நிறுவனம் கடந்த மாதம் கொள்வனவு செய்திருந்தது. கடந்த மாதத்தில் $13.50 இக்கு விற்பனை செய்யப்பட்ட குளிசை ஒன்றின் விலையை புதிய நிறுவனம் $750 ஆக உயர்த்தி உள்ளது.
.
.
Cycloserine என்ற மருந்தின் விலையும் இவ்வாறே அதிகரித்துள்ளது. Rodelis Therapeutics என்ற நிறுவனம் இந்த மருந்து உற்பத்தி செய்யும் உரிமையை கொள்வனவு செய்து அதன் பின் அந்த மருந்தின் விலையை $500 பெறுமதியாக இருந்த 30 குளிசைகளை $10,800 இக்கு விற்பனை செய்யத்தொடங்கி உள்ளது.
.
.
2013 ஆம் ஆண்டில் $20 இக்கு விற்பனை செய்யப்பட்ட Doxycycline என்ற மருந்து இப்போது $1,849 இக்கு விற்பனை செய்யப்படுகிறது.
.
அமெரிக்காவில் மருத்துவமும் ஒரு இலாப நோக்கம் கொண்ட துறையே. மருந்து பொருட்களுக்கு இங்கு விலைக்கட்டுப்பாடு எதுவும் கட்டுப்பாடு இல்லை.