ஒபியத்துக்கு தலபான் தடை, ஏற்றுமதி வீழ்ச்சி 95%

ஒபியத்துக்கு தலபான் தடை, ஏற்றுமதி வீழ்ச்சி 95%

ஆப்கானிஸ்தானின் தலபான் அந்த நாட்டில் ஒபியம் (Opium) பயிர் செய்கைக்கு தடை செய்ததால் ஆப்கானிஸ்த்தான் ஏற்றுமதி செய்யும் ஒப்பியத்தின் அளவு 95% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது என்று கூறுகிறது ஐ.நா.

2022ம் ஆண்டு அங்கு 233,000 hectare இல் ஒபியம் பயிரிடப்பட்டது என்றும் இந்த ஆண்டில் 10,800 hectare இல் மட்டுமே ஒபியம் பயிரிடப்பட்டது என்றும் ஐ.நா. கூறுகிறது.

தலபானின் ஆன்மீக தலைவர் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒபியம் பயிரிடுகையை தடை செய்திருந்தார். அதனாலேயே அங்கு ஓபிய பயிரிடல் தடை செய்யப்பட்டது.

அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து இருந்த காலத்தில், தமக்கு ஆதரவும் பெறும் நோக்கில், அங்கு ஒபியம் தடையின்றி பயிரிட அனுமதிக்கப்பட்டு இருந்தது. அக்காலத்தில் ஆப்கானித்தானின் முதலாவது ஏற்றுமதி பொருளாக ஒபியம் இருந்தது.