ஐ. நா. வில் சிரியாவை மீண்டும் பாதுகாத்த ரஷ்ய veto

Syria

இன்று செவ்வாய் ஐ. நா. வில், பொதுமக்களுக்கு எதிராக தடைசெய்யப்பட்ட குளோரின் வாயு குண்டுகளை வீசியது என்று குற்றம் கூறி, சிரியாவுக்கு எதிராக அமெரிக்கா எடுத்துவந்த தீர்மானத்தை ரஷ்யாவும், சீனாவும் veto மூலம் தடுத்துள்ளன. சிரியாவின் யுத்தம் ஆரம்பித்தபின் இன்றுடன் மொத்தம் ஏழு தடவைகள் ரஷ்யா சிரியவையும், அதன் தலைவர் Assadஐயும் பாதுகாத்து உள்ளது.
.
அத்துடன் டிரம்ப் ஆட்சியில் இதுவே முதல் தடவையாக ரஷ்யா அமெரிக்காவின் தீர்மானம் ஒன்றை ஐ.நாவில் veto மூலம் நிராகரித்து உள்ளது. இந்திய வழிவந்த அமெரிக்காவுக்கான ஐ. நா. தூதுவர் Nikki Haleyக்கும் இதுவே முதல் தோல்வி.
.
இந்த தீர்மானத்தின் மூலம் அமெரிக்கா, சிரியா மீது பல தடைகளை நடைமுறைப்படுத்த விரும்பி இருந்தது. குறிப்பாக சிரியாவுக்கு ஹெலிகள் விற்பனை செய்வதை தடை செய்ய விரும்பி இருந்தது. குளோரின் குண்டுகளை சிரியா ஹெலிகள் மூலமே போட்டதாக அமெரிக்கா கூறியிருந்தது. அத்துடன் சிரியாவுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கவும் அமெரிக்கா விரும்பி உள்ளது.
.

ஐ.நாவில் ஒரு தீர்மானம் நிறைவேற குறைந்தது 9 வாக்குகள் ஆதரவாகவும், veto வாக்குகள் கொண்ட 5 நாடுகளில் ஒன்றும் தீர்மானத்தை veto செய்யாமலும் இருத்தல் வேண்டும். இன்றைய அமெரிக்க தீர்மானத்துக்கு 9 வாக்குகள் கிடைத்திருந்தாலும், ரஷ்யாவும், சீனாவும் veto செய்துள்ளன.
.