ஐ.நா.: சைவ உணவு சூழல் மாசடைவதை தடுக்கும்

UN

தாவர அல்லது சைவ உணவு CO2 மூலம் சூழல் மாசடைவதை தடுக்க உதவும் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட ஆய்வு ஒன்று. மொத்தம் 107 விஞ்ஞானிகள் ஐ.நாவின் Intergovernmental Panel on Climate Change என்ற அமைப்புக்கு தயாரித்த ஆய்வே இவ்வாறு கூறுகிறது.
.
அந்த ஆய்வின்படி 26% global emission உணவு உற்பத்தியின்போதே உருவாகிறதாம். அதில் 58% மாமிச உணவு உற்பத்தியின்போது உருவாகிறதாம். அதில் 50% மாட்டு இறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சி உற்பத்தியின்போது உருவாகிறதாம்.
.
அத்துடன் நாம் உருவாக்கும் CO2வை உட்கொள்ளும் காடுகளும் அழிக்கப்படுவதால் சூழல் மாசடைதல் விரைவு செய்ப்படுகிறது.
.
பழைய சைவத்தில் உள்ள விஞ்ஞானத்தை புதிய விஞ்ஞானம் தற்போது தான் கண்டுள்ளது.
.