பர்மா அரசின் தலைமை அதிகாரத்துடன் செய்யல்படும் அங் சன் சூ கி (Aung San Suu Kyi) தனது ஐ. நா. பயணத்தை இன்று புதன் இரத்து செய்துள்ளார். கடந்த காலங்களில் இவர் ஐ.நாவின் மதிப்புக்கு உரியவராக இருந்தவர்.
.
பர்மாவில் இடம்பெறும் ‘பயங்கவாத’ நடவடிக்கைகளும் ‘வன்முறைகளுமே’ அங் சன் சூ கி ஐ.நா. செல்லாமைக்கு காரணம் என்றுள்ளார் அரச பேச்சாளர் ஒருவர். ஆனால் உண்மையான காரணம் இஸ்லாமியரான பர்மாவின் Rakhine மக்கள் மீது புத்த சமயத்தவரான அரச படையினர் மேற்கொள்ளும் தாக்குதல் சம்பந்தமான குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுக்க முடியாமையே உண்மையான காரணம் என்று நம்பப்படுகிறது.

அண்மையில் ஐ.நா. தனது அறிக்கை ஒன்றில் Rakhine மீதான தாக்குதல்கள் ethnic cleansing என்று கூறப்பட்டு உள்ளது.
.
அங் சன் சூ கியின் பிள்ளைகள் பிரித்தானிய பிரசைகள். பர்மாவின் சட்டம் ஒன்று வெளிநாட்டு குடும்ப உறவினரை கொண்டுள்ள ஒருவர் ஜனாதிபதி ஆவதை தடுக்கிறது. அதனால் அங் சன் சூ கியின் கட்சி ஆட்சியை அமைத்தாலும், அவர் ஜனாதிபதியாக முடியாது. பதிலாக அவரின் நம்பிக்கையை கொண்ட ஒருவர் ஜனாதிபதியாக உள்ளார். அங் சன் சூ கி சட்டப்படி பர்மாவின் ஜனாதிபதி இல்லை என்றாலும் அவரிடமே ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் உண்டு.

1991 ஆம் ஆண்டின் நொபேல் பரிசு பெற்ற இவர் Rakhine மீதான இராணுவத்தின் தாக்குதல்களை கண்டிக்காதது பலரின் கண்டனத்துக்கு உள்ளாகியது. சிலர் இவரின் நொபேல் பரிசு திருப்பி பெறப்படவேண்டும் என்றுள்ளார்.
.
.
பர்மாவின் கலவரங்களுக்கு அதிகளவு Rakhine மக்கள் உட்பட பலநூறு மக்கள் பலியாகியும், பெருமளவு வீடுகள் நாசம் செய்யப்பட்டும், சுமார் 300,000 Rakhine மக்கள் பங்களாதேசத்துக்கு இடம்பெயர்ந்தும் உள்ளனர்.
.