ஐ.நா. காசா யுத்த நிறுத்த தீர்மானத்தை அமெரிக்கா தடுத்தது 

ஐ.நா. காசா யுத்த நிறுத்த தீர்மானத்தை அமெரிக்கா தடுத்தது 

நேற்று புதன் ஐ. நா. பாதுகாப்பு சபை அறிமுகம் செய்த காசாவுக்கான உடனடி யுத்த நிறுத்த  தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ (veto) வாக்கு மூலம் மீண்டும் தடுத்து உள்ளது. ஐ.நாவில் இஸ்ரேலுக்கு எதிராக எந்த தண்டனையும் வராதபடி தொடர்ந்தும் அமெரிக்கா பாதுகாக்கிறது.

மொத்தம் 15 அங்கத்துவ நாடுகளை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு சபையில் 14 நாடுகள் மேற்படி தீர்மானத்தை ஆதரித்து இருந்தாலும் வீட்டோ வாக்கு கொண்ட அமெரிக்கா மட்டும் இஸ்ரேலை பாதுகாத்து உள்ளது.

2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் செய்த தாக்குதலுக்கு பின் இஸ்ரேல் காசா மீது செய்யும் தாக்குதல்களுக்கு இதுவரை சுமார் 43,000 பலஸ்தீனர் பலியாகி உள்ளனர். இவர்களில் 70% மானோர் சிறுவர்களும், பெண்களும்.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் 10 தெரிவு செய்யப்பட்ட நாடுகளும், அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய veto வாக்குரிமை கொண்ட 5 நிரந்தர நாடுகளும் அங்கம் கொண்டுள்ளன. மேற்படி தீர்மானத்தை பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய veto வாக்கு கொண்ட நாடுகள் தடுக்கவில்லை.