ஜெர்மனியிலும், பெல்ஜியத்திலும் மொத்தம் 23 metric தொன் cocaine போதை கைப்பற்றப்பட்டு உள்ளது. ஜெர்மன் போலீசார் 16 தொன் போதையை கைப்பற்றிய பின் பெல்ஜியம் போலீசாரை உசார்படுத்த அவர்கள் மேலும் 7.2 தொன் போதையை கைப்பற்றி உள்ளனர்.
இவற்றின் மொத்த சந்தை பெறுமதி சுமார் $1.8 பில்லியன் முதல் $4.2 பில்லியன் ஆக இருக்கும் என்று கணிப்பிடப்பட்டு உள்ளது.
முதல் தொகுதி போதை தென் அமெரிக்க நாடான பராகுவேயில் (Paraguay) இருந்து ஜெர்மனியின் Humburg துறைமுகத்துக்கு வந்துள்ளது. இரண்டாம் தொகுதி பெல்ஜியத்தின் Antwerp துறையை அடைந்துள்ளது.
நெதர்லாந்து போலீசார் 28 வயது சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக இன்று புதன்கிழமை கூறி உள்ளனர்.
ஜெர்மனிக்கு வந்த போதை wall filler என்ற கட்டிட தகரங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளன. சுமார் 1,700 தகரங்களுக்குள் போதை வைக்கப்பட்டு இருந்துள்ளது. பெல்ஜியம் வந்த போதை மர குற்றிகளை கொண்ட கொள்கலன்களுள் இருந்துள்ளன.
கடந்த அக்டோபர் மாதம் Antwerp துறைமுகத்துக்கு வந்திருந்த 11.5 தொன் போதையையும் போலீசார் கைப்பற்றி இருந்தனர். அது பழைய இரும்புகளுள் ஒளித்து வைக்கப்பட்டு இருந்தது. 2020ம் ஆண்டு ஐரோப்பா சென்ற சுமார் 102 தொன் போதைகள் கைப்பற்றப்பட்டு இருந்தன.