ஐரோப்பாவில் அமெரிக்கா படை குவிப்பு

USRussia

ஒபாமா அரசு நூற்றுக்கணக்கான அமெரிக்க காலால் படையினரை ஐரோப்பா அனுப்பியுள்ளது. இந்த படை நகர்வில் சுமார் 3500 அமெரிக்க காலால் படையினரும், அவர்களுடன் 87 tanks, 18 howitzer artillery, 419 humvee வாகனங்கள், 144 Bradley வகை யுத்த வாகனங்கள் உட்பட வேறு பல யுத்த வாகனங்களும் ஐரோப்பா சென்றுள்ளன. ஜேர்மனியில் தற்போது இறக்கப்படும்  போலந்து போன்ற  அனுப்பப்படும்.
.
ஹில்லாரி கிளிண்டனின் தோல்விக்கு ரஷ்யாவே காரணம் என்று கருதும் ஒபாமா அரசு வேகமாக இந்த படை குவிப்பை செய்து வந்தாலும் அடுத்து அரசமைக்கப்போகும் டிரம்ப் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவை மீண்டும் ஆரம்பிக்கக்கூடும்.
.
அத்துடன் அமெரிக்கா  ஐரோப்பாவுக்கு வழங்கும் பாதுகாப்பு சேவைக்கு செலவுகளுக்கு பிரதியுபகாரமாக ஐரோப்பா உரிய பொருளாதார உதவிகள் செய்தல் வேண்டும் என்றும் டிரம்ப் கடந்த காலங்களில் கூறியிருந்தார். அவர் ஒபாமாவின் படை குவிப்பை மீள் பரிசீலனையும் செய்யக்கூடும்.
.

யுக்கிரனை நாட்டைபோல் லித்துவேனியா (Lithuania), எஸ்டோனியா (Estonia), லத்வியா (Latvia) போன்ற நாடுகளிலும் ரஷ்ய இன சிறுபான்மையினர் வாழ்வதால், அவர்களை தூண்டி ரஷ்யா அங்கும் அரசியல் குழப்பங்களை விளைவிக்கலாம் என்று கருதுவதாக அமெரிக்கா கூறுகிறது. ஆனால் யுக்கிரனை NATO அமைப்புள் இழுத்து, NATO வை ரஷ்யா எல்லைவரை கொண்டுசெல்ல முனைத்தபோதே ரஷ்யா திருப்பி தாக்கி, கிரிமியா (Crimea) பகுதியை வாக்கெடுப்பு மூலம் தனதாக்கி இருந்தது.
.