ஐந்து சீன செய்தி நிறுவனங்களுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு

US_China

சீனாவை தளமாக கொண்ட 5 செய்தி நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் ரம்ப் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த செய்தி நிறுவனங்களை ‘foreign missions’ என்ற வகைக்குள் அடக்கி
.
இந்த புதிய சட்டத்துக்கு அமைய ஐந்து சீன செய்தி நிறுவனங்களின் பணியாளர்கள் அனைவரும் தமது விபரங்கள், செயல்பாடுகள், சொத்துக்கள் என்பவற்றை அமெரிக்க அரசுக்கு அறிவிக்க வேண்டும்.
.
சீனாவின் XinHua News Agency, China Global Television Network, China Radio International, China Daily, Hai Tian ஆகிய சீன நிறுவனங்களே மேற்கூறப்பட்ட சீன செய்தி நிறுவனங்கள் ஆகும்.
.
மேற்படி செய்தி நிறுவனங்கள் சீன அரசின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் பிரச்சார அமைப்புகள் என்று கூறுகிறது அமெரிக்க அரசு. அமெரிக்காவின் Voice of America நிறுவனமும் அவ்வாறு அமெரிக்க அரசின் கடுப்பாட்டுள் இயங்கும் பிரச்சார நிறுவனமே.
.
Cold War காலத்தில் சோவியத் செய்தி நிறுவனங்களும் இவ்வாறே foreign missions என்று வகைப்படுத்தப்பட்டு இருந்தன.
.