ஐந்து கிழமைகளில் அமெரிக்கா 26.4 மில்லியன் தொழில்களை இழப்பு

USFlag

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த கிழமை மட்டும் அமெரிக்கா மேலும் 4.4 மில்லியன் தொழில்களை இழந்து உள்ளது. அத்தொகை கடைந்த 5 கிழமைகளில் அமெரிக்கா இழந்த தொழில்களின் எண்ணிக்கையை 26.6 மில்லியன் ஆக உயர்த்தி உள்ளது.
.
கடந்த 5 கிழமைகளில் அமெரிக்கா இழந்த வேலைவாய்ப்புகள் அந்நாட்டின் மொத்த வேலைவாய்ப்புகளின் 15% ஆகும். அடுத்துவரும் கிழமைகளில் வேலைவாய்ப்பு இன்மை 20% ஐ அடையலாம் என்றும் கருதப்படுகிறது.
.
சில பொருளியல் ஆய்வாளர் அமெரிக்காவின் தற்போதை பொருளாதார நிலையை 1930 ஆம் ஆண்டுகளில் இருந்த Greate Depression வகை பொருளாதார நிலைக்கு ஒப்பிடுகிறார்கள்.
.
அமெரிக்கா எப்போது மீண்டும் வழமைக்கு திரும்பும் என்று அறியாத நிலையிலேயே தற்போதும் உள்ளது. வைத்திய துறை மக்களின் முடக்கத்தை தொடர விரும்பும் வேளை, வர்த்தக துறை முடக்கத்தை தளர்த்த விரும்புகிறது.
.