உங்களிடம் உள்ள GPS (Global Positioning System) வரும் ஏப்ரல் 6 ஆம் திகதிக்கு பின்னர் குழப்பத்துக்கு உள்ளாகலாம். குறிப்பாக இதன் திகதிகள் குழம்பி போகலாம். GPS மட்டுமல்லாது GPS சேவையை பயன்படுத்தும் smartphone மற்றும் server களும் குழப்பத்துக்கு உள்ளாகலாம்.
.
GPS தொழில்நுட்பம் week counter என்ற கிழமைகளை எண்ணும் முறைமையை பயன்படுத்துகிறது. தற்போது இந்த week counter ஒரு 10-digit counter ஆகும். அதனால் இந்த week counter 00 0000 0000 (decimal 0) முதல் 11 1111 1111 (decimal 1023) வரை மட்டுமே எண்ணும் வல்லமை கொண்டுள்ளது. அதாவது 0 முதல் 1023 வரை எண்ண முடியும் (0 அடங்கலாக மொத்தம் 1024).
.
வருடம் ஒன்றில் சுமார் 52.1429 கிழமைகள் உண்டு.
அதன்படி 1024/52.1429 = 19.6383 வருடங்கள்
அதாவது சுமார் 19.6383 வருடங்களின் பின் இந்த counter நிரம்பிவிடும் (11 1111 1111).
நிரம்பிய counter தொடர்ந்தும் இயங்க முடியாது
.
முதல் week 0 ஆரம்பிக்கப்பட்ட நாள்: ஜனவரி 6, 1980
முதலாம் மீள்பிப்பு (reset) நாள்: ஆகஸ்ட் 21, 1999
இரண்டாம் மீள்பிப்பு நாள்: ஏப்ரல் 6, 2019
.
உங்கள் GPS கருவிகளை அதை வழங்கிய நிறுவன இணையங்களுடன் (உதாரணம்: TomTom) இணைத்து புதிய software ஐ install செய்யலாம்.
.